மலேசிய 23 வயதுக்குட்பட்ட அணிக்கு மீண்டெழ இறுதி வாய்ப்பு

top-news

கோலாலம்பூர், செப். 13-

செய்தி-வெற்றி மைந்தன்

இந்த டிசம்பரில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள சீ விளையாட்டு போட்டிகள், மலேசியாவின் 23 வயதுக்குட்பட்ட கால்பந்து அணிக்கு இந்த ஆண்டின் கடைசி மீட்பு வாய்ப்பாக அமையும். ஆசியான் கோப்பை, 2026 ஆசிய கோப்பைக்கான தகுதிச் சுற்றுகளில் ஏமாற்றமளித்தப் பிறகு, இந்த அணி தனது மரியாதையை மீட்டெடுக்க இது ஒரு முக்கியமான தருணமாகும்.

கடந்த ஜூலை மாதம் ஜகார்த்தாவில் நடந்த ஆசியான் கோப்பையில், மலேசிய இளம் அணி குழு நிலையில் தோல்வியடைந்தது. மேலும், சமீபத்தில் 2026 ஆசிய கோப்பைக்கான தகுதிச் சுற்றில், எப் குழுவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து, இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இந்த பின்னடைவுகள் அணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.

தேசிய அணியின் கேப்டன் உபைதுல்லா ஷம்சுல் பாசிலி, சீ விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமெனில், அணியின் ஆட்டத்தை மேம்படுத்தி, சிறந்த தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என ஒப்புக்கொண்டார். திரெங்கானு அணியின் இந்த பாதுகாவலர், ஆசியான் கோப்பை, ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுகளில் ஏற்பட்ட தோல்விகளால், இந்தப் போட்டியில் அணி மீது அதிக அழுத்தம் இருப்பதை மறுக்கவில்லை.

நாங்கள் எங்கள் ஆட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும். சீ விளையாட்டு போட்டிகளில் ஏதாவது சாதிக்க வேண்டுமெனில், மிகச் சிறந்த தயாரிப்பு அவசியம் என்று உபைதுல்லா மேலும் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *