மலேசியக் குடியுரிமையைத் துறந்து வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற 98,318 மலேசியர்கள்! – மலேசியாவை விட்டு வெளியேறும் மலேசியர்கள்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 9, 

மலேசியாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் மீத வாழ்க்கையை வாழ விரும்பும் மலேசியர்களை அரசாங்கம் தடுக்க வேண்டும் என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தக்கியுடீன் வலியுறுத்தினார். ஆனால் இப்படியான கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபூடின் நசுதியூன், தக்கியுடீனின் கோரிக்கையை மறுத்தார். கடந்த 6 மாதங்களில் மலேசியக் குடியுரிமையைத் துறந்து மற்ற நாடுகளுக்குப் புலம்பெயரும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். கடந்த ஜூன் 30 வரையில் 6,060 மலேசியர்கள் மலேசியாவை விட்டு வெளியேறி சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றிருப்பதாக டத்தோ ஸ்ரீ சைபூடின் நசுதியூன் தெரிவித்தார். 6,060 மலேசியர்களும் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் மலேசியாவிலிருந்து வெளியேறியிருப்பதை உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2015 இல் 7,394 மலேசியர்கள் மலேசியாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் குடியுரிமையைப் பெற்றிருப்பதாகவும் 2016 இல் 8,654 மலேசியர்களும், 2017-இல் 7,583 மலேசியர்களும், 2018-இல் 7,665 மலேசியர்களும், 2019-இல் 13,362 மலேசியர்களும் 2020 இல் 5,591 மலேசியர்களும், 2021-இல்  7,956 மலேசியர்களும் 2022-இல் 5,623 மலேசியர்களும், 2023 இல் 11,500 மலேசியர்களும் கடந்த 2024 ஆம் ஆண்டு அதிகப்பட்சமாக 16,930 மலேசியர்களும் தங்களின் மலேசியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்து வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்று வெளிநாட்டில் வாழ்ந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *