டிரம்பின் வருகை தொடர்பில் அமானாவும் அம்னோவும் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 1-

டிரம்பின் மலேசிய வருகை தொடர்பில் அமானாவும் அம்னோவும் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் வலியுறுத்தி.இந்த மாதம் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியா வரவுள்ளார்.

அவர் இந்த நாட்டில் இருப்பது குறித்து அமானாவும் அம்னோவும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.மக்கள் தங்கள் தலைமையிடமிருந்து விளக்கத்திற்காகக் காத்திருக்கும்போது இரு கட்சிகளும் இன்னும் அமைதியாக இருக்கின்றன.அமானா கொள்கை ரீதியான, உறுதியான கட்சி என்றும், வெறும் கட்டளைகளைப் பின்பற்றும் கட்சி அல்ல என்றும் அவர் ஒப்புக் கொண்டார்.

உண்மையில், அமானாவின் தலைவர் முஹம்மது சாபு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகப் பேசியவர்களிலும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் அணுகுமுறையைக் கண்டித்தவர்களிலும் ஒருவர் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.பாலஸ்தீனப் பிரச்சினையில் அமானாவின் உறுதியான நிலைப்பாடு இன்று எங்கே சென்றது? டிரம்பின் கைகள் இன்னும் பாலஸ்தீன மக்களின் ரத்தத்தால் கறை படிந்திருக்கிறது.

இந்நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரை மலேசியாவிற்கு கௌரவ விருந்தினராக அழைத்தது குறித்து அவர்கள் ஏன் தொடர்ந்து மௌனம் காக்கின்றனர்?மேலும் இந்தப் பிரச்சினையில் அம்னோவிடமிருந்தும் ஓர் உறுதியான குரலை நாங்கள் எதிர்பார்க்கிறோம், என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *