கிளந்தான் வெள்ளப் பேரிடர் தீவிரம்! இதுவரை 9,319 பேர் பாதிப்பு

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

கோத்தா பாரு, நவ. 24-

கிளந்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று மதியம் 2 மணி நிலவரப்படி 9,319 ஆக உயர்ந்துள்ளது.

இந்தப் பாதிப்புக்குள்ளான அனைவரும் தற்போது நான்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 37 தற்காலிக நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சமூக நலத்துறைத் தகவல் அறிக்கையின்படி, பல கிராமங்களில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. மழை தொடர்வதால் மேலும் பலர் இடம்பெயர வேண்டிய நிலை உருவாகலாம் என அஞ்சப்படுகிறது.

மாநில அரசு, தேசிய பாதுகாப்பு படை, தீயணைப்பு, மீட்புத் துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உணவு, மருந்து, போர்வை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் உடனடியாக வழங்கப்பட்டு வருகின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *