சரவாக்கில் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு: 473 பேர் 13 தற்காலிக இடமாற்று முகாம்களில் தங்க வைப்பு

top-news

கூச்சிங், ஜன. 9-

சரவாக்கில் வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்று காலை 11 மணி வரை 132 குடும்பங்களைச் சேர்ந்த 473 பேர் 13 தற்காலிக இடமாற்று முகாம்களில் (PPS) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மிரி பகுதியில் முகாமில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 72 பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ளனர்.

பாவ் பகுதியில் இரு முகாம்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கம்போங் பிஜுராய் மோங்காக், 22 குடும்பங்களைச் சேர்ந்த 87 பேரும், கம்போங் ப்ளிம்பின் 15 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும் தங்கியுள்ளனர்.

சிபுரான் பகுதியில் அதிகபட்சமாக ஆறு முகாம்கள் செயல்பாட்டில் உள்ளன.

தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் சரவாக்கின் பல பகுதிகளைப் பாதித்துள்ளது. அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *