“நமது வீடு, நாமே காப்போம்” முழங்குகிறது சபா மக்கள் கூட்டணி
- Tamil Malar (Reporter)
- 18 Nov, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
கோத்தா கினபாலு, நவ. 18-
சபா மக்கள் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிடப்பட்டது. “நமது வீடு, நாமே காப்போம்” எனும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த இந்த அறிக்கை, மாநில வருவாயை உயர்த்துவதற்கும் மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கும் தொடர்ச்சியான உறுதியை அளிக்கிறது.
ஜி.ஆர்.எஸ் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டத்தோ அர்மிசான் அலி கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஜி.ஆர்.எஸ் அரசு ஏற்கனவே பல சாதனைகளைப் பதிவு செய்துள்ளது. இந்த அறிக்கை அந்த வெற்றிகளைப் பட்டியலிடுவதோடு, எதிர்கால இலக்குகளையும் தெளிவாக வகுக்கிறது என்றார்.
முக்கிய சாதனையாக,ஜி.ஆர்.எஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மாநில வருவாய் 2021-இல் முதல்முறையாக 5 பில்லியனைத் தாண்டியது. முன்னதாக பல ஆண்டுகளாக 3 பில்லியன் முதல் 4 பில்லியன் வரை மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
2021 முதல் தொடங்கிய “சபா மாஜூ ஜெயா 1.0” திட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்த அறிக்கை அமைந்துள்ளது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட உறுதிமொழிகளை சபா மக்கள் கூட்டணி முன்வைத்து தேர்தல் களத்தில் குதிக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



