வெள்ளத்தில் மூழ்கிய மாரான் மரத்தாண்டவர் ஆலயம்!
- Thinagaren Sanggaren
- 17 Dec, 2025
டிசம்பர் 17,
பிரபலமானக் கோயில்களில் ஒன்றான மாரான் மரத்தாண்டவர் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியது. நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாகக் கோயில் முதன்மை நுழைவாயில் முதல் பின் பக்கம் வரையிலும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக மாரான் ஸ்ரீ மரத்தாண்டாவர் ஆலயத்தின் தலைவர் பி.இராமன் தெரிவித்தார். தொடர்மழையின் காரணமாகக் கோயிலின் பின்னால் அமைந்திருக்கும் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து வெள்ள நீர் ஆலயத்திற்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்குச் செல்லவிரும்பும் பக்தர்கள் வெள்ள நீர் வடியும் வரையில் பொறுமை காக்கும்படியும் தற்போது வெள்ள நீர் வெளியேற்ற பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரான் ஸ்ரீ மரத்தாண்டாவர் கோயிலுக்கு வரும் முக்கிய சாலைகள் மூடப்பட்டிருப்பதால் வெளியிலிருந்து வரும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்தின் அறிவிப்பு வரும் வரையில் காத்திருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



