கடல் வழியாக மலேசிய எல்லைக்குள் நுழைந்த 3 மியான்மார் ஆடவர்கள் கைது!
- THINAGAREN SANGGAREN
- 15 Jul, 2026
ஜுலை 15,
மலேசிய எல்லைக்குள் கடல் வழியாக நுழைய முயற்சித்த மூவரைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் கைது செய்தனர், நேற்று நண்பகல் 1 மணியளவில் கிள்ளான் துறை முகத்தின் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் ரோந்து பணியில் இருந்த போது பதிவு எண் இல்லாத fiber படகு மலேசிய எல்லைக்குள் நுழைந்ததாகவும், படகைத் தடுத்து சோதனையிட்டதில் படகில் இருந்த மூவரும் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்ததாகவும் சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் கேப்டன் Abdul Muhaimin Muhammad Salleh தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் இந்தோனேசியர்கள் என்றும் ஒருவர் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் மூவரும் 26 முதல் 32 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் கேப்டன் Abdul Muhaimin தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



