கடல்வழியாக மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்த 27 வெளிநாட்டினருடன் உள்ளூர் ஆடவரும் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 11,

தென் சீனக் கடல் வழியாகச் சிலாங்கூரின் கிள்ளான் துறைமுகத்திற்குள் நுழைய முயன்ற மீன்பிடிப் படகைச் சோதனையிட்டதில் 27 வெளிநாட்டினர்களும் உள்ளூர் ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவும் 12.35 மணிக்குக் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது சந்தேகத்திற்குரிய படகு கிள்ளான் துறைமுகத்திற்குள் நுழைந்ததும் படகை முற்றுகையிட்டு சோதனை நடத்தியதாகச் சிலாங்கூர் மாநில Maritim கேப்டன் Abdul Muhaimin Muhammad Salleh தெரிவித்தார். 

தப்பிக்க முயன்ற மீன்பிடி படகை அதிகாலை 1 மணிக்குச் சுற்று வலைத்ததாகவும் படகில் இருந்த 22 முதல் 70 வயதுள்ள 7 பெண்கள் 20 ஆண்கள் என மொத்தம் 27 வெளிநாட்டினர்களிடம் மலேசியாவுக்குள் நுழைவதற்கான எந்தவோர் உரிமையும் இல்லாததால் உடனடியாக அவர்களைக் கைது செய்ததாகவும் அவர்களைச் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கடந்த முயற்சித்த 32 வயது உள்ளூர் ஆடவரையும் கைது செய்திருப்பதாகச் சிலாங்கூர் மாநில Maritim கேப்டன் Abdul Muhaimin Muhammad Salleh தெரிவித்தார். 


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *