கடல் வழியாக மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்த 78 இந்தோனேசியர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 31,

சிலாங்கூர் கடல்வழியாக மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த 78 இந்தோனேசியர்களைச் சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் கைது செய்தது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிலாங்கூர் கடற்படை அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய 2 படகுகளை மலேசியக் கடல் எல்லையில் சோதனையிட்டதாகவும் படகின் ஓட்டுநர் என நம்பப்படும் ஆடவர் கடலில் குதித்து தப்பிய நிலையில் படகை முற்றுகையிட்டு 78 இந்தோனேசியர்களையும் கைது செய்திருப்பதாகவும் சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் கேப்டன் Abdul Muhaimin Muhammad Salleh தெரிவித்தார்.


சம்மந்தப்பட்ட மீன்பிடி படகு இந்தோனேசியாவின் Batu Bara துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்ட படகு என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதிகாலை 3.30 மணிக்குச் சம்மந்தப்பட்ட படகு சிலாங்கூரின் சபாக் பெர்ணாம் கடல் எல்லைக்குள் நுழைந்ததாகவும் சுமார் 15 நிமிடங்கள் படகைத் துரத்தி அதிகாரிகள் முற்றுகையிட்டதாகவும் சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் கேப்டன் Abdul Muhaimin Muhammad Salleh தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் 49 ஆண்கள் 29 பெண்கள் என்றும் அனைவரும் 14 முதல் 60 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *