மசாஜ் தலத்தில் 19 வெளிநாட்டுப் பெண்கள் கைது!
- Thinagaren Sanggaren
- 29 Jan, 2026
ஜனவரி 29,
பூச்சோங்கில் உள்ள வணிகத் தலத்தில் மசாஜ் பணியாளர்களாக வேலை செய்து வந்த 19 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் சம்மந்தப்பட்ட வளாகத்திலிருந்த 19 பெண் பணியாளர்களிடமும் முறையான ஆவணங்கள் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் பாஸ்போர்ட்கள் மட்டுமே இருந்ததாகவும் மலேசியாவுக்குள் நுழைந்ததற்கான எந்தவோர் ஆவணங்களும் இல்லை என குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
சம்மந்தப்பட்ட வளாகத்திலிருந்து கைப்பேசிகளும் 1,500 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் 22 முதல் 48 வயதினர் என்றும் ஒழுக்கக் கேடானச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண்கள் வியட்னாம், பிலிப்பைன்ஸ், மங்கோலியா, ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட வணிக வளாகத்தின் உரிமையாளர்கள் என நம்பப்படும் 7 உள்ளூர் நபர்களும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



