சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட இளம்பெண்கள் உட்பட 60 இளைஞர்கள் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 20, 

இன்று அதிகாலை குவாந்தான் மாவட்டப் போக்குவரத்து குற்றப்புலனாய்வுத் துறௌயினர் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 60 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குவாந்தான் நகரில் அதிகாலைகளில் வார இறுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை நடத்துவதாகவும் இந்த சட்டவிரோதப் பந்தயத்தை இளம் காதலர் நடத்துவதாகவும் புலனாய்வில் தெரிய வந்ததும் சம்மந்தப்பட்ட காதல் ஜோடிகளையும் கைது செய்துள்ளதாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Adli Mat Daud தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட காதல் ஜோடிகளான 24 வயது இளம்பெண்ணும் அவரின் 20 வயது காதலரும் மேலதிக விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 60 இளைஞர்களையும் விசாரணைக்குப் பின்னர் கட்டுப்பாட்டுடன் விடுதலை செய்திருப்பதாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Adli Mat Daud தெரிவித்தார். இச்சோதனை நடவடிக்கையில் 173 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் 60  மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Adli Mat Daud தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *