அடுத்த ஆண்டு பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகமா? கல்வி அமைச்சர் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 2,

அடுத்த ஆண்டுப் பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என வெளியான செய்திகளைக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek மறுத்தார். மாணவர்களிடையே அதிகரித்துள்ள பாதுகாப்பற்ற சூழலைக் கட்டுப்படுத்த புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் எண்ணம் கல்வி அமைச்சுக்கு இல்லை என Fadhlina Sidek தெரிவித்தார். இது மாணவர்களின் பண்புகள் சார்ந்தது என்பதால் மாணவர்களின் கட்டொழுங்குடன் தொடர்பானப் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யவிருப்பதாக Fadhlina Sidek தெரிவித்தார். 

இது கற்றல் கற்பித்தல் தொடர்பானது என்பதால் கல்வி அமைச்சின் பாடத்திட்ட ஆலோசனைக் குழு இது குறித்தான ஆய்வுகளை மேற்கொண்டு கற்பித்தல் முறைமைகளைச் சீரமைக்கும் என Fadhlina Sidek தெரிவித்தார். ஆனால் எந்தவொரு புதிய பாடத்திட்டத்தையும் அறிமுகப்படுத்தும் எண்ணம் கல்வி அமைச்சு கொண்டிருக்கவில்ல என Fadhlina Sidek விளக்கமளித்தார். புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்துவதற்குக் கால அவகாசம் எடுக்கும் என்றும் புதிய கல்விக் கொள்கைகளில் மட்டுமே புதிய பாடத்திட்டம் குறித்தான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் Fadhlina Sidek தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *