4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபரில் புதிய தேர்வு!
- THINAGAREN SANGGAREN
- 05 Jul, 2026
ஜூலை 5,
தொடக்கப்பள்ளியில் பயிலும் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் MATRIC தேர்வு எனும் புதிய தேர்வு நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தொடக்கப்பள்ளியின் அடிப்படை பாடங்களான ஆங்கிலம், மலாய், கணிதம், அறிவியல் பாடங்களை அடிப்படையாக கொண்டு இந்த தேர்வு மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் தேர்வு ஆணையத்தின் இயக்குநர் AB AZIZ MAMAT தெரிவித்தார். இந்த புதிய தேர்வை மலேசியா முழுவதும் உள்ள அனைத்து வகை தொடக்கப்பள்ளியில் நான்காம் ஆண்டு பயிலும் சுமார் 400,000 மாணவர்கள் எழுதுவார்கள் என கல்வி அமைச்சு எதிர்பார்க்கிறது.
தாய்மொழி பள்ளிகளில் தமிழ், சீனம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்வு பாடமாக இருப்பதால் MATRIC தேர்வில் தமிழ் மொழித் தேர்வும் அங்கீகரிக்கப்பட்ட தேர்வாக இருக்கும் என கல்வி அமைச்சின் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு தேர்வும் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதும் 4ஆம் ஆண்டு மாணவர்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சின் தேர்வு ஆணையத்தின் இயக்குநர் AB AZIZ MAMAT நினைவூட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



