நான்காம் ஆண்டு, மூன்றாம் படிவ மாணவர்களுக்குப் புதிய கற்றல் மதிப்பீடு: கல்வித் தரத்தை உயர்த்த அரசின் முயற்சி

top-news

புத்ராஜெயா, ஜன. 20- நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு இந்த ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான கற்றல் அளவீட்டு மதிப்பீட்டை (Pengukuran Pembelajaran Tahun Empat) அமல்படுத்துகிறது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த மதிப்பீடு மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம்,  அறிவியல் ஆகிய நான்கு முக்கிய பாடங்களை உள்ளடக்கும். மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

அதே நேரத்தில், 2027 ஆம் ஆண்டிலிருந்து மூன்றாம் படிவ மாணவர்களுக்கான கற்றல் அளவீட்டு மதிப்பீடு (Pengukuran Pembelajaran Tingkatan Tiga) அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதில் மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு ஆகிய ஐந்து முக்கிய பாடங்கள் இடம்பெறும்.

இந்த இரண்டு மதிப்பீடுகளும் தேர்வு வாரியம் (Lembaga Peperiksaan) மூலம் மையப்படுத்தப்பட்ட முறையில் நடத்தப்படும். இது மாணவர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுத்தும் தேர்வாக அல்ல, அவர்களின் கற்றல் முன்னேற்றத்தை மதிப்பிடும் கருவியாக மட்டுமே இருக்கும் என பிரதமர் விளக்கினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *