6 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்த தந்தை!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 29, 

நெகிரி சொம்பிலானில் உள்ள ரெம்பாவ் ரொம்பின் புதரிலிருந்து 6 வயது சிறுவனின் உடலைக் காவல்துறையினர் சடலமாக மீட்டனர். கடந்த 24 ஜூலை, 36 வயதான ஆடவர் ஒருவர் தனது மகனைக் காணவில்லை என ஜொகூரில் உள்ள  Iskandar Puteri காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புக்கிட் இண்டாவில் உள்ள கடையில் உணவு வாங்கும் போது காரிலிருந்த தனது 6 வயது மகனை அடையாளம் தெரியாத கும்பல் கடத்தியதாக 36 வயது ஆடவரின் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜொகூர் மாநிலக் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக 28 ஜூலை நெகிரி செம்பிலானில் உள்ள ரொம்பின் செல்லும் சாலையின் ஓரத்தில் சிறுவனின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதைக் காவல்துறையினர் கண்டறிந்ததாகவும் காணாமல் போனதாக நம்பப்பட்ட 6 வயது M Tishant எனும் சிறுவனின் உடல் தான் என அடையாளம் காணப்பட்டதாகவும் நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறைத் தலைவர் Datuk Ahmad Dzaffir Mohd Yussof தெரிவித்தார். 6 வயது சிறுவனின் கழுத்தில் கேபிளால் நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் பிரேதப் பரிசோதனையில் கழுத்தில் ஏற்பட்ட இறுக்கத்தால் சிறுவன் உயிரிழந்திருப்பதாகவும் உறுதிச் செய்யப்பட்டதாக Datuk Ahmad Dzaffir Mohd Yussof தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணையில் காரிலிருந்த மகனைக் கடத்தியதாகப் புகார் அளித்த 36 வயது ஆடவரைக் காவல்துறையினர் விசாரித்ததாகவும் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் அளித்ததாகவும் சிறுவன் காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட புக்கிட் இண்டா உணவக்கத்தின் CCTV காணொலில் கடத்தலுக்கான எந்தவோர் ஆதாரமுமில்லை என தெரிய வந்த நிலையில் சம்மந்தப்பட்ட 36 வயது ஆடவரைக் காவல் துறையினர் கைது செய்து 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *