அழுகிய நிலையில் ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்!

- Sangeetha K Loganathan
- 17 Mar, 2025
மார்ச் 17,
நிர்வாணமாக அழுகிய நிலையில் ஆணின் சடலம் நேற்று ஆற்றில் மிதந்தது. காலை 8.31 மணிக்குக் கெடாவில் உள்ள Alor Merah ஆற்றங்கரையில் சடலத்தைக் கண்டதாக அவசர அழைப்புப் பெற்ற நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கோலா ஸ்டார் மாவட்டக் காவல் ஆணையர் Siti Nor Salawati Saad தெரிவித்தார்.
ஆற்றங்கரையில் நிர்வாணமாக ஆணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாகவும் சடலம் குறித்தான எந்தவோர் ஆவணங்களும் இல்லை என்றும் இதுவரையில் சடலம் குறித்தான எந்தவோர் அடையாளமும் இல்லாததால் பிரேதப்பரிசோதனைக்குப் பின்னர் விசாரணையைத் தொடர்வதாக Siti Nor Salawati Saad தெரிவித்தார்.
Mayat seorang lelaki dalam keadaan reput dan tanpa pakaian ditemui terapung di Sungai Alor Merah, Kedah. Polis menerima panggilan kecemasan pada 8:31 pagi dan masih menyiasat identiti serta punca kematian selepas bedah siasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *