அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆடவரின் உடல்!

- Sangeetha K Loganathan
- 29 May, 2025
மே 29,
மாரானில் உள்ள Kampung Paya Pasir ஆற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது. அடையாளம் தெரியாத அளவிற்குச் சடலம் அழுகியிருந்தாலும் முதற்கட்ட விசாரணையில் அது 58 வயது உள்ளூர் ஆடவரின் சடலம் என கண்டறியப்பட்டிருப்பதாகப் பகாங் மாநில மீட்பு ஆணையச் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். Kampung Paya Pasir ஆற்றின் மணல் திட்டுகளின் குழாய் அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டதாக அவர் உறுதிப்படுத்தினார்.
பிற்பகல் 3 மணியளவில் Kampung Paya Pasir ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் ஆற்றில் சடலம் மிதப்பதாகத் தகவல் தெரிவித்தத்தும் சம்பவ இடத்திற்கு 7 மீட்புப் படை அதிகாரிகள் விரைந்ததாகவும் சம்மந்தப்பட்ட ஆடவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக Tengku Ampuan Afzan மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் மாரான் மாவட்டக் காவல் ஆணையர் Wong Kim Wai தெரிவித்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் விசாரணையைத் தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
Seorang lelaki tempatan dipercayai berusia 58 tahun ditemui mati dalam keadaan reput di sungai Kampung Paya Pasir, Maran. Mayat ditemui oleh pemancing dan dibawa ke Hospital Tengku Ampuan Afzan untuk bedah siasat. Polis meneruskan siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *