வாகனத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!
- THINAGAREN SANGGAREN
- 24 Feb, 2026
பிப்ரவரி 24,
எரிவாயு நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்து பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை பினாங்கு Ayer Itam PETRONAS எரிவாயு நிலையத்தில் MYVI வாகனத்திற்குள் பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததாகச் சந்தேகித்த ஆடவர் மீண்டும் மாலை 6 மணிக்கு அந்த பெண் அசைவற்று இருப்பதைக் கண்டதும் காவல் நிலையத்திற்கு அவசர அழைப்பை விடுத்ததாக வடகிழக்கு மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak தெரிவித்தார்.
மாலை 6 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சுகாதாரப் பணியாளர்களும் மீட்புப் படையினரும் விரைந்து வாகனத்திலிருந்த பெண்ணை மீட்டு பரிசோதித்ததில் அப்பெண் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் பல்வேறு பொருள்கள் கலைந்த நிலையில் இருந்ததாகவும் எந்தவொரு குற்றவியல் சம்பவங்களும் நிகழ்ந்திருப்பதாக அறியப்படவில்லை என்றும் வடகிழக்கு மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் ஆயேர் ஈத்தாம் Paya Terubong பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வடகிழக்கு மாவட்டக் காவல் ஆணையர் Abdul Rozak தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



