நிர்வாகத்தில் கவனம் செலுத்த பெர்சத்து உச்ச மன்ற பதவியிலிருந்து Abu Bakar விலகல்
- Surendran Sumdraraj
- 09 Jul, 2026
கோலா பெர்லிஸ், ஜூலை 9-
மாநில நிர்வாகப் பணிகளில் முழு கவனம் செலுத்துவதற்காக, பெர்சத்து கட்சியின் உச்சமன்ற பதவியிலிருந்து விலகியுள்ளதாக பெர்லிஸ் மந்திரி பெசார் Abu Bakar Hamzah உறுதிப்படுத்தியுள்ளார்.
அவருடன், செனா சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான Marzita Mansor-வும் கடந்த வாரம் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Abu Bakar கூறுகையில், மத்திய மட்டத்தில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்கான நேரக் கட்டுப்பாடு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், தனது நிர்வாகக் காலம் இன்னும் சுமார் ஒரு ஆண்டே மீதமுள்ள நிலையில், பெர்லிஸ் மாநிலத்தை முன்னேற்றும் பணிகளில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



