ரியல் மாட்ரிட் அபார வெற்றி

top-news

மாட்ரிட், பிப். 2-

லா லீகா தொடரில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில், கிலியன் எம்பாப்பே கூடுதல் நேரத்தின் 100-ஆவது நிமிடத்தில்  பெனால்டி கோலை மாற்றி, ரியல் மாட்ரிட் அணிக்கு Rayo Vallecano மீது 2–1 என்ற முக்கியமான வெற்றியைப் பெற்றுத்தந்தார். ஒன்பது வீரர்களுடன் போராடிய Rayo அணியின் எதிர்ப்பை முறியடித்து, Los Blancos ரசிகர்களுக்கு நிம்மதியை வழங்கியது.

இந்த வெற்றியின் மூலம், பார்சிலோனா அணியை விட ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கிய நிலையில் ரியல் மாட்ரிட் உள்ளது. இதற்கு முன், பார்சிலோனா Elche அணியை வென்றதன் மூலம் முன்னணியில் நீடித்தது.

ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே, ஜூட் பெல்லிங்காம் ஹாம்ஸ்ட்ரிங் காயம் காரணமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் சுமார் ஒரு மாதம் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது. அதன்பின்னர், வினிசியஸ் ஜூனியர் முதல் பாதியில் ரியல் மாட்ரிட் அணிக்கு முன்னிலை கோலைப் பெற்றுத் தந்தார்.

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில், ஜோர்ஜ் டி புருடோஸ் Rayo அணிக்காக சமநிலை கோலை அடித்து, போட்டியை மீண்டும் உயிர்ப்பித்தார். முந்தைய வாரம் பென்பிகா அணியிடம் சாம்பியன்ஸ் லீக்கில் தோல்வியடைந்ததன் காரணமாக, மாட்ரிட் ரசிகர்கள் அணியிடம் விரக்தியை வெளிப்படுத்திய நிலையில், இந்த ஆட்டம் கடும் அழுத்தத்தில் நடைபெற்றது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *