23 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு MBO சினிமாஸ் மூடல்
- Surendran Sumdraraj
- 11 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 11-
திரைப்பட அரங்குகளை நடத்திவந்த MBO Cinemas Sdn Bhd (MBO Cinemas) நிறுவனம் 23 ஆண்டுகள் செயல்பட்ட பிறகு தனது அனைத்து கிளைகளையும் நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த முடிவை மிகுந்த வருத்தத்துடன் எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த MBO Cinemas இனி தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்துகிறது என்றும், அனைத்து திரையிடல்களும் தற்போது நிறைவடைந்துவிட்டன என்றும் கூறப்பட்டுள்ளது.
“பல ஆண்டுகளாக எங்களுக்குத் துணையாக இருந்த பார்வையாளர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மரியாதையாகும். உங்கள் திரைப்பட அனுபவத்தின் ஒரு பகுதியாக இருப்பது எங்களுக்கு பெருமை,” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் பிரபலமான திரையரங்கச் சங்கிலிகளில் ஒன்றாக இருந்த MBO Cinemas, நாடு முழுவதும் பல கிளைகளை இயக்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு திரைப்பட ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



