சுகாதாரமற்ற 4 கடைகளை மூடிய பினாங்க நகராண்மைக் கழகம்!
- Thinagaren Sanggaren
- 24 Aug, 2025
ஆகஸ்ட் 24,
சுகாதாரமற்ற முறையில் கடைகள் இயங்கி வருவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெற்ற நிலையில் பினாங்கில் உள்ள Barat Daya, Timur Laut ஆகிய மாவட்டங்களில் பினாங்கு நகராண்மைக் கழகத்தினர் மேற்கொண்ட சோதனையில் 4 கடைகள் மூடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட கடைகளில் 3 வணிக வளாகங்கள் என்றும் 1 உணவகம் என்றும் தெரிய வந்துள்ளது. இன்று காலை பினாங்கு நகராண்மைக் கழக அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள 19 கடைகளைச் சோதனையிட்டதாகவும் அதிகமாகப் புகார்களைப் பெற்ற 4 கடைகளிலும் சுகாதாரப் பிரச்சனைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்ததும் 4 வளாகங்களையும் 14 நாள்கள் மூடும்படி உத்தரவிட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட வளாகங்களில் எலிகளின் கழிவுகளும் பூச்சிகளின் நடமாட்டங்களும் அதிகமாக இருப்பதாகவும் காலாவதியானப் பொருள்கள் விற்பனையில் இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வாரக் கணக்கில் உணவுகள் பதப்படுத்தப்பட்டு உணவகத்தில் பரிமாறப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட 4 வளாகங்களையும் செப்டம்பர் 4 க்குள் முழுமையாகத் தூய்மைப்படுத்தும்படி பினாங்கு நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளதாகவும் மீறினால் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



