ம.சீ.ச ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தேவையில்லாத சுமை! டி.ஏ.பி சாடல்!
- Thinagaren Sanggaren
- 25 Aug, 2025
ஆகஸ்ட் 25,
பாரிசான் உறுப்புக் கட்சியான ம.சீ.சவுடன் டி.ஏ.பி எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளவில்லை என டி.ஏ.பி பொதுச் செயலாளரும் அமைச்சருமான Anthony Loke தெரிவித்தார். டி.ஏ.பி பக்காத்தானின் உறுப்புக் கட்சி. ம.சீ.ச பாரிசானின் உறுப்புக் கட்சி. கடந்த பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி அமைக்க பாரிசானும் பக்காத்தானும் இணைந்து ஒற்றுமை கூட்டணியை உருவாக்கியதால் ம.சீ.சவுடன் டி.ஏ.பி சமரசம் செய்து கொண்டதாகக் கருத வேண்டாம் என Anthony Loke விளக்கமளித்துள்ளார்.
ம.சீ.சவுடன் டி.ஏ.பி எந்தவொரு ஒப்பந்தத்தையும்
போட்டுக்கொள்ளவில்லை. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்
எனில் ஒற்றுமை கூட்டணியில் உள்ள கட்சிகளில் சுமையாக இருப்பது இந்த ம.சீ.ச என்பதை டி.ஏ.பி
வெளிப்படையாகப் பாரிசானின் தலைமையிடம் தெரிவித்திருப்பதாக Anthony Loke தெரிவித்தார். இப்போது அல்ல, எப்போதுமே
ம.சி.சவுடன் ஒத்துப்போக முடியாது என்பதை டி.ஏ.பியினர் உணர்ந்திருப்பதாகவும் ம.சீ.ச
இல்லாமல் இருந்தால் அந்த இடத்தில் டி.ஏ.பியின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
என்றும் ம.சீ.ச கேட்கும் அரசியல் ஒத்துழைப்பிற்கு டி.ஏ.பி கடுமையாக எதிர்ப்பதாக Anthony
Loke தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



