டி.ஏ.பிக்கு அரசியல் கட்சியாக இருக்க அருகதை இல்லை! - Wee Ka Siong சாடல்!
- Thinagaren Sanggaren
- 08 Dec, 2025
டிசம்பர் 8,
ம.சீ.ச கட்சி சீனர்களை ஏமாற்றி விட்டதாக சூளுரைத்து ஆட்சியைக் கைப்பற்றிய டி.ஏ.பி சீனர்களையும் சீனப்பள்ளிகளையும் கைவிட்டு விட்டதாக ம.சீ.ச கட்சியின் தலைவரும் ஆயேர் ஹித்தாம் நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Seri Wee Ka Siong குற்றம் சுமத்தினார். டி.ஏ.பி கட்சி சீனர்களை அங்கீகரித்து சீனர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தவறிவிட்டது என்றும் சீனப்பள்ளிகளுக்கான அரசு நிதிகளை நிரந்தரமாகப் பெற்று தர தவறிவிட்டதாகவும் Datuk Seri Wee Ka Siong தெரிவித்தார். ம.சீ.ச ஆட்சியில் இருந்த போது, அதாவது 2018 வரையில் நாட்டிலுள்ள அனைத்து அரசு சீனப்பள்ளிகளுக்கும் கல்வி அமைச்சின் முழு நிதி வழங்கப்பட்டதை Datuk Seri Wee Ka Siong சுட்டிக்காட்டினார். ஆனால் தற்போது சீனப்பள்ளிகளுக்கான அரசு நிதிகள் சிறப்பு நிதிகளின் மூலமாக மட்டுமே வழங்கப்படுவதால் ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு நிதி வழங்கப்படும் என்பதும் தீர்மானிக்கப்படாமல் இருப்பதாக Datuk Seri Wee Ka Siong தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டில் 10 புதிய சீனப்பள்ளிகளுக்கான ஒப்புதலை அரசாங்கம் வழங்கியது. ஆனால் 2018 முதல் 2024 வரையில் எந்தவொரு சீனப்பள்ளிக்கும் அரசாங்கம் ஒப்புதல் வழங்கவில்லை. ம.சீ.சவின் ஆட்சியில் பெறப்பட்ட 10 புதிய சீனப்பள்ளிகளுக்கான ஒப்பந்தத்தையும் டி.ஏ.பி கட்சியினர் கண்டுக்கொள்ளவில்லை என்றும் Datuk Seri Wee Ka Siong குற்றம்சுமத்தினார். கல்வி அமைச்சின் துணைக் கல்வி அமைச்சராகச் சீனர் அமர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை ம.சீ.ச முன்வைத்ததும். Wong Kah Woh டி.ஏ.பி கட்சியைச் சார்ந்தவர் என்றாலும் அவர் ஒரு சீனர் என்பதால் ம.சீ.ச எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் துணைக் கல்வி அமைச்சர் Wong Kah Woh சீனப்பள்ளிகளையும் சீன மாணவர்களையும் கைகழுவி விட்டார் என முன்னாள் அமைச்சரும் ம.சீ.ச கட்சியின் தலைவருமான Datuk Seri Wee Ka Siong கடுமையாகச் சாடினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



