சமூகவலைத்தலங்களை அரசு கட்டுப்படுத்துகிறதா? அம்னோவின் AKMAL SALEH குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 1, 

சர்ச்சைக்குரிய சமய போதகரான FIRDAUS WONG-கின் சமூகவலைத்தலம் முடக்கப்பட்டிருப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என அம்னோவின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் DATUK AKMAL SALEH தெரிவித்துள்ளார். தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானக் கருத்துகளைப் பதிவு செய்ததாக மேற்கோள் காட்டி சர்ச்சைக்குரிய சமய போதகரான FIRDAUS WONG-கின் பொது முகநூல் அகப்பக்கத்தை முடக்கியது. இது குறித்து சர்ச்சைக்குரிய சமய போதகரான FIRDAUS WONG அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில் அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவர் DATUK AKMAL SALEH தொடர்புத்துறை அமைச்சர் இப்படி செய்யலாமா? இது தான் பக்காத்தானின் கருத்துச் சுதந்திரமா என கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த காலங்களில் பக்காத்தான் எதிர்கட்சியாக இருந்த போது சமூகவலைத்தலங்களில் பரப்பிய குற்றச்சாட்டுகளைத் தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC நீக்கியது இல்லை. அப்படியான நடவடிக்கைகளை MCMC எடுத்திருந்தால் இப்போது ஆட்சியில் இருக்கும் உங்களின் சமூகவலைத்தலக் கணக்குகள் இல்லாமல் போயிருக்கும் என அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவர் DATUK AKMAL SALEH நினைவூட்டினார். இப்படியானக் கட்டுப்பாடுகள் ஒரு தரப்பினர்களுக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறது என்றும் வெளிப்படையான விசாரணைகளை தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC மேற்கொள்ள வேண்டும் என அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவர் DATUK AKMAL SALEH வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *