முகைதீனுக்கு எதிரான விசாரணை தொடர்கிறது! – MCMC

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 9, 

அரசாங்கத்தின் மானிய விலையிலான RON 95 எரிவாயு தொடர்பாகக் கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் தலைவருமான முகைதீன் யாசினுக்கு எதிரான விசாரணை தொடர் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தேசிய பாதுகாப்பு பல்லூடக ஆணையமான MCMC தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் முகைதீன் அரசாங்கத்தின் மானிய விலைகள் குறித்து தவறான புள்ளி விவரங்களைப் பகிர்ந்து சர்ச்சயைக் கிளப்பியது. 

அரசாங்கத்தின் மானிய விலைகள் குறித்து தாம் எந்தவொரு தகவலையும் தமது டிக் டோக்கில் பதிவிடவில்லை என முகைதீன் விளக்கமளித்த நிலைதில் டிக் டோக் நிறுவனத்தைத் தவறாக வழிநடத்திய அரசாங்கத்தை முகைதீன் கடுமையாகச் சாடினார். இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டிக் டோக் தலைமையிடமிருந்து அதிகாரப்பூர்வப் பதில் பெற்றதும் தேசிய பாதுகாப்பு பல்லூடக ஆணையம் மேலதிக விசாரணைகளைத் தொடரும் என தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *