ZAMRI VINOTH, FIRDAUS WONG, TAMIM DAHRI மூவரின் முகநூலையும் முடக்கிய MCMC!
- THINAGAREN SANGGAREN
- 12 Mar, 2026
மார்ச் 12,
தேசிய பல்லூடகப்
பாதுகாப்பு ஆணையமான MCMC சர்ச்சைக்குரிய சமய போதகரான ZAMRI VINOTH, கோயில்களுக்கு எதிராகச் செயல்பட்ட FIRDAUS WONG, TAMIM DAHRI ஆகிய மூவரின் தனிப்பட்ட முகநூல் கணக்குகளையும் முடக்கியுள்ளது. சட்டவிரோதக்
கோயில்களுக்கு எதிராகச் செயல்படும் கூட்டமைப்பான GARAH அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் இந்து மதம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும்
முகநூலில் பதிவாக வெளியிட்டு வந்த ZAMRI VINOTH, FIRDAUS WONG, TAMIM DAHRI ஆகிய மூவருக்கும்
எதிராகப் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்ட இந்த நடவடிக்கையை தேசிய பல்லூடகப் பாதுகாப்பு
ஆணையமான MCMC எடுத்துள்ளதாகக் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான GANABATHI RAU தெரிவித்தார்.
தனிப்பட்ட முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டாலும் FIRDAUS WONG-இன் முகநூல் அகப்பக்கம் செயல்பாட்டில் இருப்பதாக FIRDAUS WONG தெரிவித்துள்ள நிலையில் புதிய முகநூல் கணக்கைத் தொடங்கிய ZAMRI VINOTH குறிப்பிட்ட இந்து மதம் சார்ந்த அமைப்புகள் தமிழ்ப்பள்ளிகளில் இந்துத்துவா RSS கொள்கைகளை வளர்ப்பதற்காக ஒரு சில காரியங்களில் ஈடுப்பட்டிருப்பதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்த புகார் மனுவைப் பதிவேற்றம் செய்துள்ளார். சம்மந்தப்பட்ட இந்து மத அமைப்பு இந்தியாவில் உள்ள RSS அமைப்பின் கிளை இயக்கமாகச் செயல்படுவதாகவும் இஸ்லாத்திற்கு எதிரானப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் ZAMRI VINOTH காவல் நிலையத்தி அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



