திவால் நிலையிலிருந்து விடுபட ‘விரைவு நடைமுறை’
- Tamil Malar (Reporter)
- 19 Jan, 2026
ஜாசின், ஜன.19-
தனித்து வாழும் தாய்மார்கள், இணைய மோசடி (scammer) பாதிக்கப்பட்டவர்கள், சிறு கடன் (micro loan) பெற்றவர்கள், திவால் நிலையிலிருந்து விடுபட விரைவு நடைமுறை (fast track) வழிமுறையின் மூலம் இரண்டாவது வாய்ப்பைப் பெற உள்ளதாக மலேசிய திவால்துறை (MDI) அறிவித்துள்ளது.
MDI தலைமை இயக்குநர் டத்தோ இஷாக் பக்ரி கூறுகையில், அரசின் இரண்டாவது வாய்ப்பு கொள்கை (Dasar Peluang Kedua) அடிப்படையில், மூன்று முக்கியக் கூறுகளை உள்ளடக்கிய இந்த விரைவு நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். இந்தக் கொள்கை, தண்டனைக்குப் பதிலாக தனிநபர்களின் மீட்பு, நலனையே முன்னிலைப்படுத்துகிறது என்றார்.
இந்த fast track முறையின் மூலம், உண்மையாகவே உதவி தேவைப்படுவோருக்கு திவால் நிலையிலிருந்து விடுபடும் செயல்முறை குறிப்பிடத்தக்க அளவில் விரைவுபடுத்தப்படும் என அவர் விளக்கினார்.
மேலும், 2023ஆம் ஆண்டு திவால்துறைச் சட்டத்தில் (Akta Insolvensi 2023) செய்யப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக திவால் நிலை விடுவிப்பை வழங்கும் அதிகாரம் MDI தலைமை இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



