மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் – TTV Dhinakaran
- Surendran Sumdraraj
- 11 Jul, 2026
சென்னை, ஜூலை 11-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் TTV Dhinakaran வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகத்தில் பருவமழை போதுமான அளவில் பெய்யாததால், தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க இயலாது என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை நீர் திறக்க உத்தரவிடவில்லை என்றும், தமிழக அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ கோரிக்கை வரவில்லை என்றும் கூறப்பட்டிருப்பது, காவிரி நீரை குடிநீர் மற்றும் பாசனத்திற்காக நம்பியிருக்கும் தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களுக்கும் காவிரி படுகை விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இதுவரை திறக்கப்படாத நிலையில், ஜூன் மாதத்திற்கான 9.91 TMC மற்றும் ஜூலை மாதத்திற்கான 32 TMC நீர் உரிய நேரத்தில் வழங்கப்படாமல் தாமதப்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



