5 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இராணுவ அதிகாரி கைது!
- Thinagaren Sanggaren
- 25 Jul, 2025
ஜுலை 25,
மலாக்காவில் பாலர் பள்ளியில் பயிலும் 5 வயது சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக நம்பப்படும் 32 வயது இராணுவ அதிகாரி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மலாக்கா மஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 5 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 32 வயது ஆடவர் ஓர் இராணுவ அதிகாரி என்பதால் கடந்த ஜனவரி மாதம் முதல் பாலர் பள்ளியிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமியை வீட்டுக்கு அழைத்து வருவதாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரியான 13 வயது மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
மலாக்கா MRSM கல்லூரியில் படிக்கும் தாம் விடுமுறைக்காகத் திரும்பிய
பொது தனது 5 வயது தங்கை இது குறித்து தம்மிடம் தெரிவித்ததாகக் காவல் நிலையத்தில் புகார்
அளித்துள்ளார். பாலர் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் 5 வயது சிறுமிக்கு
மிட்டாய்களையும் ஐஸ்கிரீம்களையும் வாங்கி தந்து உடல் பாகங்களைத் தொடுவதாகவும் முத்தமிட்டுள்ளதாகவும்
முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



