இரு கும்பலுக்கிடையிலான கலவரத்தை இன கலவரமாகச் சித்தரிக்க வேண்டாம்! – காவல் துறை!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 29

மலாக்காவில் கும்பலாக கலவரத்தில் ஈடுபடும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் இனக் கலவரம் எனும்படியாகப் பரப்பப்படுவதைத் தவிர்க்கும்படி மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar வலியுறுத்தினார். மலாக்கா அலோர் காஜாவில் உள்ள Bulatan Kancil சாலையில் 9 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் சாலையோரமாக மோட்டார் சைக்கிள்களை நிறுத்தியதாகவும் மலாக்கா நகராண்மைக் கழகம் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்குச் சம்மன் வழங்கியதால் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கும் நகராண்மைக் கழக அதிகாரிகளுக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளோட்டிகள் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar விளக்கமளித்தார்.

மலாக்கா நகராண்மைக் கழக அதிகாரிகளைத் தாக்கிய மோட்டார் சைக்கிள் கும்பலைச் சேர்ந்த 9 ஆண்களையும் 9 பெண்கள் உட்பட 23 பேரைக் காவல்துறை கைது செய்த நிலையில் நேற்றிரவு  விசாரணைக்குப் பின்னர் 22 பேரை ஜாமினில் விடுதலை செய்ததாகவும் 30 வயதுள்ள ஆடவரை 3 நாள்கள் தடுப்புக் காவலில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 30 வயது ஆடவர் நகராண்மைக் கழக அதிகாரியை ஹெல்மெட்டால் தக்கியதாகவும் பாதிக்கப்பட்ட நகராண்மைக் கழக அதிகாரி சிகிச்சை பெற்று வருவதாகவும் மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். இச்சம்பவத்தை இரு சமூகத்திற்கிடையிலானக் கலவரமாகச் சித்தரிக்க வேண்டாம் என மலாக்கா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar நினைவூட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *