சாலையில் கிடந்த மரக்கிளையை மோதி ஆடவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 12,

சாலையில் கிடந்த மரக்கிளையை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்ததார். இன்று அதிகாலை 1 மணியளவில் மலாக்காவில் உள்ள Lebuh A.M.J சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்றது சம்பவ இடத்திற்கு மீட்பு அதிகாரிகளுடன் விரைந்து பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டதாக மத்திய  மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். சம்பவ இடத்தில் எந்தவொரு சி.சி.டி.வி காணொலில்களும் இல்லாததால் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக மத்திய  மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார்.


இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் சகோதரர்கள் என்றும் உயிரிழந்தவர் 33 வயது Muhammad Fauzy Borhan என்றும் படுகாயம் அடைந்தவர் 30 வயது Muhammad Naim என்றும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மத்திய  மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். சாலையோரத்திலிருந்த மரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக மத்திய  மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *