டி.ஏ.பிக்கு ஆட்சி செய்ய தகுதி இல்லை! அம்னோ சாடல்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 15,

டி.ஏ.பி கட்சிக்கு ஆட்சியை நடத்துவதில் பக்குவமில்லை என அம்னோவின் இளைஞர் பிரிவுத் தலைவர் Datuk Dr Akmal Saleh கருத்து தெரிவித்துள்ளார். மலாக்கா மாநில டி.ஏ.பி தலைவர் Khoo Poay Tiong தற்போதைய பொருளாதாரச் சூழலைக் காரணம் காட்டி மலாக்கா மாநிலத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவசரக் கால நிலையான DARURAT-ஐ அமல்படுத்த வேண்டும் என தெரிவித்திருப்பது கேலியான கருத்து என Datuk Dr Akmal Saleh தெரிவித்தார். அவருடைய இந்த கருத்து டி.ஏ.பிக்கு ஆட்சி செய்யும் தகுதி இல்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக Datuk Dr Akmal Saleh சாடினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலை விடவும் மோசமானப் பொருளாதார வீழ்ச்சிகளையும் பாரிசான் அரசு சமாளித்தது. அப்போது அவசரக் கால நிலையைப் பாரிசான் அறிவிக்கவில்லை. ஆனால் கோவிட் காலத்தின் போது அறிவிக்கப்பட்ட அவசரக் கால நிலையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தாலும் மீண்டும் பாரிசான் ஆட்சியில் பொருளாதாரத்தை மீட்டெடுத்ததை Datuk Dr Akmal Saleh சுட்டிக்காட்டினார். நாட்டைச் சிறப்பாக ஆட்சி செய்தால் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் நாம் தைரியமாக எதிர் கொள்ளலாம் என Datuk Dr Akmal Saleh டி.ஏ.பிக்கு வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *