மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து டி.ஏ.பி விலகியது!
- THINAGAREN SANGGAREN
- 15 Jul, 2026
ஜூலை 15,
மலாக்கா மாநில அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை டி.ஏ.பி மீட்டுக்கொள்வதாக டி.ஏ.பி கட்சியின் மலாக்கா மாநிலத் தலைவர் Khoo Poay Tiong அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மலாக்கா அரசாங்கத்தில் டி.ஏ.பி வகித்து வந்த 1 ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியையும் 3 துணை ஆட்சிக் குழு உறுப்பினர் பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளதாக தலைவர் Khoo Poay Tiong தெரிவித்தார். இனி வரும் காலங்களில் மலாக்கா மாநிலத்தில் டி.ஏ.பி எதிர்க்கட்சியாக செயல்படும் என மலாக்கா மாநில டி.ஏ.பி தலைவர் Khoo Poay Tiong உறுதியளித்தார்.
மலாக்கா மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் மக்களால்
நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அரசு பதவிகளை மலாக்கா மாநில அரசு வழங்குவதைக்
கண்டித்து டி.ஏ.பி முன்மொழிந்த எந்தவொரு தீர்மானத்தையும் மலாக்கா மாநில பாரிசான்
ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் டி.ஏ.பி மாநில அரசாங்கத்திலிருந்து விலகுவதாக Khoo Poay Tiong விளக்கமளித்தார். டி.ஏ.பியின் AYER KEROH சட்டமன்ற
உறுப்பினர், KESIDANG சட்டமன்ற
உறுப்பினர் SEAH SHOO CHIN, KOTA LAKSAMANA சட்டமன்ற
உறுப்பினர் LOW CHEE LEONG. BANDAR HILIR சட்டமன்ற உறுப்பினர் LENG CHAU YEN ஆகிய 4 டி.ஏ.பி
சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று முதல் எதிர்க்கட்சித் தலைவரான AMANAH கட்சியின் ADLY ZAHARIக்கு ஆதரவளிப்பார்கள் என
தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



