அரசாங்கத்திலிருந்து டி.ஏ.பி விலகினாலும் மாநில அரசுக்குப் பாதிப்பு இல்லை! – மலாக்கா முதல்வர்

top-news
FREE WEBSITE AD

ஜூலை 15,

மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து டி.ஏ.பியின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் விலகினாலும் மாநில அரசுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என மலாக்கா மாநில முதல்வர் Datuk Seri Ab Rauf Yusoh தெரிவித்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு மலாக்கா மாநிலத் தேர்தலுக்குப் பின்னர் பாரிசான் தனித்த பெரும்பான்மையில் மலாக்காவில் ஆட்சி அமைத்தது. அதே பெரும்பான்மை இப்போதும் இருக்கிறது. 2022 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் பாரிசான் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கியதால் அரசியல் பரஸ்பர உணர்வால் மலாக்காவிலும் டி.ஏ.பியினர் மாநில அரசாங்கத்தில் அங்கம் வகிக்க பாரிசான் தலைமை ஒப்புக்கொண்டது என Datuk Seri Ab Rauf Yusoh தெரிவித்தார்.

 20 November 2021-இல் நடைபெற்ற மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் 21 சட்டமன்றங்களில் வெற்றிப் பெற்று தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைத்துள்ளது. பக்காத்தான் 5 சட்டமன்றங்களில் பெரிக்காரத்தான் 2 சட்டமன்றங்களிலும் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *