அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டாம்! டி.ஏ.பிக்கு அன்வார் கோரிக்கை!
- THINAGAREN SANGGAREN
- 15 Jul, 2026
ஜூலை 15,
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து விலகுவதாக டி.ஏ.பி எடுத்திருக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி பக்காத்தான் தலைவரும் பிரதமருமான Datuk Seri Anwar Ibrahim கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தெரிய வந்ததும் டி.ஏ.பியின் பொதுச் செயலாளர் Anthony Loke, மலாக்கா மாநில முதல்வர் Datuk Seri Ab Rauf Yusoh ஆகிய இருவரிடமும் நான் பேசினேன். மாநிலத் தேர்தல் வரையில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும்படி டி.ஏ.பிக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன் என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
இது குறித்து எந்தவோர் இறுதி முடிவையும் தாம் எடுக்க போவதில்லை என மலாக்கா மாநில முதல்வர் Datuk Seri Ab Rauf Yusoh என்னிடம் தெரிவித்தார். ஆளும் கட்சியினரிடையே கருத்து முரண்கள் இருப்பது இயல்பானது தான் என்றாலும், மக்கள் நலனைப் பாதுகாப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என Datuk Seri Anwar Ibrahim கேட்டுக்கொண்டார். பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் தலைமைக்குக் கட்டுப்பட்டு, அரசாங்கத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்க வேண்டும் என Datuk Seri Anwar Ibrahim கூட்டணிக் கட்சிகளுக்கு வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



