மலாய்க்காரர்களின் முன்னேற்றமே மலேசியாவின் முன்னேற்றம்! – முக்ரீஸ் மகாதீர்!
- Thinagaren Sanggaren
- 19 Jul, 2025
ஜூலை 19,
மலாய்க்காரர்கள் ஒன்றிணைவதால் மற்ற இனத்தவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என பெஜுவாங் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் மகாதீரின் மகனுமான முக்ரீஸ் மகாதீர் தெரிவித்தார். மலாய் அமைப்புகள் மகாதீரின் தலைமையின் கீழ் ஒருங்கிணைய வேண்டும் என மகாதீர் அழைப்பு விடுத்திருப்பதற்குப் பெஜுவாங் கட்சி முழுமையாக ஆதரிப்பதாகவும் இது மலாய் சமூகத்திற்கான மகாதீரின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக முக்ரீஸ் மகாதீர் தெரிவித்தார்.
இன்று பெஜுவாங் கட்சியின் நான்காவது தேசிய மாநாடு மகாதீரின் தலைமையில் நேற்று ஷா அலாம் ஐ.டி.சீ.சீ மாநாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடீன், பெர்சத்து உதவித் தலைவர் அஹ்மாட் பைசால் அசுமூ, ம.இ.காவின் பொதுச் செயலாளர், நிர்வாகச் செயலாளர்கள் உட்பட பல்வேறு கட்சியின் தலைமைப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
மலாய்க்காரர்களின் முன்னேற்றமே நாட்டின்
முன்னேற்றம் என்பதை மலேசியர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என்பதை முக்ரீஸ் மகாதீர் வலியுறுத்தினார்.
மலாய்க்காரர்களின் முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்களை முன்னெடுப்பதில் அரசியல்வாதிகல்
சுணக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை என முக்ரீஸ் மகாதீர் தெரிவித்தார். ஆனால் ஆட்சியில்
இருப்பவர்கள் மலாய் சமூகத்திற்கான நலத்திட்டங்களை முன்னெடுக்க விரும்புவதில்லை என முக்ரீஸ்
மகாதீர் குற்றம்சாட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



