12 ஆண்டுகளாகியும் நீடிக்கும் MH370 மர்மம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 8-

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH370 விமானம் காணாமல் போன சம்பவம் உலக விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப் பெரிய மர்மமாக இன்று வரை நீடித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி அதிகாலை 1.19 மணிக்கு, விமானத்தின் காக்பிட் பகுதியில் இருந்து விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு குறுகிய பதில் பதிவு செய்யப்பட்டது.

“Good night Malaysian Three-Seven-Zero” என்ற அந்த வார்த்தைகள் தான் அந்த விமானத்திலிருந்து வந்த கடைசி தகவலாக அமைந்தது. அதன்பின், கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி பயணித்த அந்த போயிங் 777 விமானம் திடீரென ரேடார் திரைகளிலிருந்து மறைந்தது.

அந்த விமானத்தில் மொத்தம் 227 பயணிகளும் 12 விமான பணியாளர்களும் இருந்தனர். விமானம் காணாமல் போன சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல நாடுகள் இணைந்து பெரும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும், விமானத்தின் முழுமையான தடயங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இன்று அந்த சம்பவம் நடந்தது 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், MH370 விமானம் எப்படி, எங்கே காணாமல் போனது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதனால், இந்த சம்பவம் உலக விமான வரலாற்றில் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாகவே தொடர்ந்து பேசப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *