மனித வள அமைச்சரானார் டத்தோ ஶ்ரீ ரமணன்

top-news

கோலாலம்பூர், டிச. 16- தொழில்முனைவோர்,  மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சின் துணையமைச்சர் பதவி வகித்த டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சற்று முன் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில் டத்தோஶ்ரீ ரமணனுக்கு இந்தப் புதிய துறையில் முழு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

மனித வள அமைச்சராகப் பொறுப்பில் இருந்த ஸ்டீவன் சிம், இந்தப் புதிய அமைச்சரவையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  கூட்டுறவு த்துறை அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். மேலும் பதவி வழங்கப்பட்ட அனைவரும் நாளை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வர் என பிரதமர் தெரிவித்தார்.

துன் வீதி சம்பந்தன், டான்ஸ்ரீ சுப்பிரமணியம், டத்தோஸ்ரீ எம். சரவணன், எம். குலசேகரன், சிவக்குமார் ஆகியோர் மனிதவள அமைச்சராக இதற்கு முன் பொறுப்பு வகித்த இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சராக இருந்த ரமணன் தற்போது முழு அமைச்சராக மனிதவள அமைச்சு பொறுப்பை ஏற்கவுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *