தீபாவளிக் கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்து 22 பேர் படுகாயம்! – KULIM, KEDAH!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 20,

தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் சுற்றியிருந்த 22 பேர் படுகாயம் அடைந்தனர். அதிகாலை 12.15 மணிக்குத் தீபாவளியை முன்னிட்டு கூலிமில் உள்ள Paya Besar சாலையில் வானவேடிக்கைகள் கொளுத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து வானவேடிக்கைகள் வெடித்தததில் நள்ளிரவு 12.45 மணிக்குப் பட்டாசு தரையிலேயே வெடித்ததில் சுற்றியிருந்த பொதுமக்களில் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகக் கூலிம் மாவட்டக் காவல் ஆணையர் Zulkifli Azizan தெரிவித்தார்.

சம்பவத்தில் 22 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் படுகாயத்துடன் அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Zulkifli Azizan  தெரிவித்தார். பட்டாசைப் பொதுவெளியில் வெடிக்க எந்தவொரு முன் அனுமதியும் பெறவில்லை என்றும், பட்டாசுகளை வெடித்த தரப்பினர் சம்பவ இடத்தில் இல்லை என்பதால் அவர்களைக் காவல்துறையினர் தேடி வருவதாகவும் மக்கள் கூடும் பொது இடங்களில் பட்டாசுகளை வெடிக்க எந்தவொரு அனுமதியும் காவல்துறை வழங்கவில்லை என Zulkifli Azizan  தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 22 பேரும் கூலிம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Zulkifli Azizan தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *