சாலையின் நடுவே பட்டாசை வெடித்து 22 பேர் காயமான சம்பவத்தில் இருவர் கைது!
- Thinagaren Sanggaren
- 21 Oct, 2025
அக்தோபர் 21,
பட்டாசு வெடித்து 22 பேர் காயமடைய காரணமாக இருந்த இருவரையும் 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆடவர் 32 வயது உள்ளூர்வாசி என்றும் மற்றொருவர் 23 வயது இளம்பெண் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டிருக்கும் ஆடவர் குடிபோதையில் பட்டாசுகளை வெடித்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
நேற்று நள்ளிரவு கெடா கூலிம்மில் உள்ள Paya Besar சாலையில் வானவேடிக்கையுடன் பல்வேறு பட்டசுகளையும் கொளுத்தி 23 வயது இளம்பெண்ணுடன் சம்பவ இடத்திலிருந்து வெளியேறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பட்டாசைச் சாலையின் நடுவே வெடித்ததில் 22 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 10 பேர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



