பெருநாள் காலத்தில் 113 பட்டாசு வெடிப்பால் பாதிப்புகள்!
- THINAGAREN SANGGAREN
- 23 Mar, 2026
மார்ச் 23,
பெருநாள் காலங்களில் செயல்படும் தற்காலிகப் பட்டாசு கடைகளின் உரிமம் தொடர்பாக மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என உள்ளூர் ஆட்சி, வீட்டுவசதி அமைச்சர் Nga Kor Ming வலியுறுத்தியுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு பெருநாள் காலங்களில் பட்டாசுகளால் ஏற்பட்ட பாதிப்புச் சம்பங்கள் தற்போது 113 ஆக உயர்ந்துள்ளது ஆச்சரியமளிப்பதாகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே பட்டாசுகளால் பாதிப்புகள் ஏற்படாது என Nga Kor Ming தெரிவித்தார்.
கொண்டாட்டம் என்பது பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதில் நாம் மேலும் உறுதியாக இருக்க வேண்டும் என அமைச்சர் Nga Kor Ming பொதுமக்களுக்கு வலியுறுத்தினார். பட்டாசுகள் விற்பனை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கும் போது தன்மையாகயும் பொறுப்புடனும் பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்துக்கொள்ள கூடாது என உள்ளூர் ஆட்சி, வீட்டுவசதி அமைச்சர் Nga Kor Ming லேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



