மெஸ்ஸி மீண்டும் சாதனை! அதிக கோல் அசிஸ்ட் செய்த வீரர் என்ற உலக சாதனையை முறியடித்தார்
- Tamil Malar (Reporter)
- 01 Dec, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
மியாமி, டிச. 1-
உலகின் தலைசிறந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, மீண்டும் ஒரு அபார சாதனையைப் படைத்தார். அமெரிக்க மேஜர் லீக் சாக்கர் போட்டியில் நியூயார்க் சிட்டி எப்சியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இன்டர் மியாமி அணிக்கு மெஸ்ஸி மற்றொரு பிரம்மாண்ட சாதனையைப் பரிசளித்தார்.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி வழங்கிய அசிஸ்ட்டின் மூலம் அணியின் மூன்றாவது கோலை மத்தேயோ சில்வெட்டி அடித்தார். இதன் மூலம் மெஸ்ஸி, ஹங்கேரியின் லெஜண்ட் பெரென்ச் புஸ்காஸை முந்தி, கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அசிஸ்ட் (405) செய்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார்.
மெஸ்ஸி இதுவரை கிளப், நாட்டுக்காக 1,168 போட்டிகளில் விளையாடி 405 அசிஸ்ட்களை வழங்கியுள்ளார். புஸ்காஸ் 708 போட்டிகளில் 404 அசிஸ்ட்கள் மட்டுமே வழங்கியிருந்தார்.
இதன் மூலம் உலகில் அதிக கோப்பைகளை வென்ற வீரர் என்ற தனது சாதனையையும் மேலும் வலுப்படுத்தினார் அர்ஜென்டினாவின் மாபெரும் நட்சத்திரம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



