தாய்லாந்து-கம்போடியா எல்லைக் கலவரம்: ASEAN வெளியுறவு அமைச்சர்கள் சிறப்புக் கூட்டம் ஒத்திவைப்பு
- Tamil Malar (Reporter)
- 15 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 15-
தாய்லாந்து, கம்போடியாவுக்கு இடையே தொடரும் எல்லைக் கலவரத்தை மதிப்பீடு செய்வதற்கான ASEAN வெளியுறவு அமைச்சர்களின் சிறப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இரு அண்டை நாடுகளும் நாளை நடைபெறவிருந்த கூட்டத்தைச் சிறிது ஒத்திவைக்கக் கோரியதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். "அவர்கள் (கம்போடியா, தாய்லாந்து) கூட்டத்தை சிறிது ஒத்திவைக்கக் கோரினர். எனவே, அனைத்தும் ஒழுங்காக நடைபெறுவதை உறுதிப்படுத்த இதை ஒத்திவைக்கிறோம்.
"எனினும், இரு தரப்பினரும் எந்தவொரு மோதலையும் நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்துகிறோம். தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது, நான் அவர்களுடன் தினசரி தொடர்பில் உள்ளேன்" என்று அவர் கூறினார்.
மலேசியா ASEAN தலைவராக இருப்பதால், அமைதிக்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே ஜூலை, அக்டோபரில் அமைதி ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், மோதல் மீண்டும் வெடித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



