5 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை! – MET MALAYSIA

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 18,

இன்று மாலை 5 மணிமுதல் 5 மாநிலங்களில் கனமழையுடன் கூடிய புயல் தாக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கனமழை அதிகாலை 1 வரையில் நீடிக்கும் என ஆய்வுகள் குறிப்பிடுவதால் இரவு நேர வெளிபுற செயல்பாடுகளை ஒத்திவைக்கும்படி பொதுமக்களுக்கு மெட் மலேசியா எச்சரிக்கைவிடுத்துள்ளது. முக்கியமாக ஆற்றோரப்பகுதிகளில் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்நிலைகளின் அளவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மீட்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படியும் மெட் மலேசியா நினைவூட்டியுள்ளது. தொடர் வெள்ளத்தில் பாதிக்காமல் இருக்க பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் மெட் மலேசியா தெரிவித்துள்ளது. கெடாவில் புயலின் வீரியம் அதிகமாக இருக்கும் என்பதால்  Kubang Pasu, Kota Setar, Pokok Sena, Padang Terap, Yan, Pendang, Kuala Muda ஆகிய மாவட்டங்கள் அதிக சேதத்தை எதிர்நோக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *