ம.இ.கா போனால் போகட்டும்! பாரிசானில் மற்ற இந்தியர் கட்சிகள் உள்ளன! – அம்னோ PUAD ZARKASHI!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 23,

பாரிசானிலிருந்து ம.இ.கா வெளியேறினால் பாரிசானுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என அம்னோ உச்சமன்ற உறுப்பினரும் ஜொகூர் சட்டமன்றச் சபாநாயகருமான Datuk  Puad Zarkashi தெரிவித்தார். ம.இ.கா பாரிசானிலிருந்து வெளியேறுவதை அதன் துணைத் தலைவர் சரவணன் அம்னோ முன்னாள் உச்சமன்ற உறுப்பினரான தாஜூடீன் ரஹ்மானிடம் தெரிவித்துள்ளதை Datuk Puad Zarkashi சுட்டிக்காட்டினார். பாரிசானிலிருந்து அதன் உறுப்புக் கட்சிகள் வெளியேறும் எண்ணம் கொண்டிருந்தால் அதைப் பொதுவெளியில் தம்பட்டம் அடிக்க வேண்டிய அவசியமில்லை என Datuk Puad Zarkashi நினைவூட்டினார்.

ம.இ.கா மட்டும் தான் இந்தியர்களைப் பிரதிநிதிப்பதாக எண்ண வேண்டாம், ம.இ.கா போனால் போகட்டும். பாரிசானில் இந்தியர்களைப் பிரதிநிதித்து Makkal Sakti, MIUP, PPP, Parti Punjabi, KIMMA என பல இந்தியர் கட்சிகள் நட்புடன் இருப்பதை Datuk Puad Zarkashi சுட்டிக்காட்டினார். பாரிசான் கடந்த தேர்தலில் சந்தித்த பின்னடைவுக்குப் பின்னர் பலரும் பாரிசானிலிருந்து விலகி செளகரியமான இடத்திற்குச் சென்றனர். அவர்கள் பாரிசானை மீட்டெடுக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ம.இ.காவும் இப்போது அவர்களைப் போலவே நடந்துக் கொள்கிறது அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Puad Zarkashi தெரிவித்தார்.

ஆனால் ம.இ.கா ஒன்றை மட்டும் புரிந்துக் கொள்ள வேண்டும். ம.இ.கா அதன் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த மலாய்க்காரர்களின் ஆதரவும் தேர்தலில் மலாய்க்காரர்களின் வாக்குகளும் மிக முக்கியம், அப்படியான ஆதரவும் வாக்கும் பாரிசானிலிருந்து வெளியேறினால் ம.இ.காவுக்குக் கிடைக்குமா என ம.இ.காவினர் உணர வேண்டும் என Datuk Puad Zarkashi நினைவூட்டினார். பாரிசானிலிருந்தும் மற்ற கட்சிகளிலிருந்தும் வெளியேறியவர்கள் அமைத்திருக்கும் கூட்டணிதான் பெரிக்காத்தான். அப்படியான கூட்டணியை நம்பி ம.இ.கா கைக்கோர்த்தால் அது ம.இ.காவுக்குப் பலமா? எனும் கேள்வியை Datuk Puad Zarkashi முன்வைத்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *