ம.இ.காவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை! – பாரிசான் தலைவர் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 7,

பெர்சத்துவின் 8 ஆவது பேராளர் பொதுக்கூட்டத்தில் ம.இ.கா பங்கேற்றிருப்பது குறித்து பாரிசான் தலைமை நடவடிக்கை எடுக்கும் என பாரிசான் தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். ம.இ.காவின் பிரதிநிதியாகப் பெர்சத்து மாநாட்டில் பங்கேற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் ம.இ.காவிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கத்தைப் பெற பாரிசான் விரும்புவதாக அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான Datuk Seri Dr Ahmad Zahid Hamidi இன்று தெரிவித்தார்.

பாரிசானின் உறுப்புக் கட்சியாக இருக்கும் ம.இ.கா இப்படி செய்திருக்க கூடாது. இதன் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ம.இ.காவிடம் விட்டு விடுகிறோம். பாரிசானின் பொதுக்குழுவின் மூலமாக ம.இ.காவின் விளக்கத்தைக் கேட்டறிவதாகவும் ம.இ.காவின் மோசமான செயலால் பாரிசானுக்கு எந்தவோர் ஆபத்தும் நிகழ்ந்திட கூடாது என்றும் பாரிசானின் உறுப்புக் கட்சிகளிடையிலான ஒற்றுமைத்துவத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும் பாரிசான் தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi வலியுறுத்தினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *