இங்கிதமில்லாமல் பிச்சை எடுக்கும் ம.இ.கா & ம.சீ.ச? யாரோடு இருக்க போகிறீர்? அமனா கட்சி கேள்வி!
- Thinagaren Sanggaren
- 09 Sep, 2025
செப்டம்பர் 9,
ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து கொண்டு பெரிக்காத்துடன் உறவை வளர்க்கும் ம.இ.காவும் ம.சீ.சவும் உண்மையில் யாருடன் கூட்டணியில் இருக்க போகிறார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அமானா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய மட்டத்தில் அம்னோவுக்கு ஒற்றுமைக் கூட்டணிக்கும் குடைச்சலைக் கொடுக்கும் ம.இ.காவும் ம.சீ.சவும் மாநில அளவில் பதவிகளுக்காகப் பிச்சை எடுப்பதாக அமானா கட்சியின் ஜொகூர் மாநில உதவித் தலைவர் Dr Zuhan Zain சாடினார். முக்கியமாக ஜொகூர் மாநிலத்தில் ம.இ.காவும் ம.சீ.சாவும் மாநில அமைச்சர் பதவிகளில் உள்ளனர். ஆனால் தேசிய மட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக வேலை செய்கிறார்கள். இது எப்படியான அரசியல் நிலைப்பாடு என Dr Zuhan Zain கேள்வி எழுப்பினார்.
ஓர் அரசியல் கட்சியாக ம.இ.காவும் ம.சீ.சாவும் அதன் நிலைபாட்டை
வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அமானா கட்சியின் ஜொகூர் மாநில உதவித் தலைவர் Dr
Zuhan Zain வலியுறுத்தினார். தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்தாத அரசியல்
கட்சி அதன் சுயமரியாதையை இழந்து இங்கிதமே இல்லாத ஒரு கட்சியாக அடையாளப்படுத்தப்படும்
என Dr Zuhan Zain நினைவூட்டினார். இது என்ன மாதிரியான அரசியல் போக்கு? இதனால் மக்களுக்கு
என்ன நன்மை விளைய போகிறது என Dr Zuhan Zain கேள்வி எழுப்பியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



