ம.இ.காவிடம் அம்னோ கெஞ்சாது! போனால் போகட்டும்! – அம்னோ முடிவு!
- Thinagaren Sanggaren
- 09 Aug, 2025
ஆகஸ்ட் 9,
கெடா மாநில ம.இ.கா அம்னோவுடன் ஒத்துழைக்க முடியாது என்பதால் பெரிக்காத்தானில் இணைவதாகத் தீர்மானம் ஏற்றியிருப்பதால் கெடா அம்னோவுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என கெடா மாநில அம்னோ தொடர்புக் குழு தலைவர் டத்தோக் ஷைபூல் ஹசிசி சைனூல் (Datuk Shaiful Hazizy Zainol Abidin) தெரிவித்தார். கெடாவில் ம.இ.கா இல்லை என்றாலும் பாரிசான் வலுவாக இருப்பதை டத்தோக் ஷைபூல் ஹசிசி சைனூல் நினைவூட்டினார். தேசிய மட்டத்தில் ம.இ.கா பிரிந்தாலும் கெடாவில் எந்தவொரு பாதிப்பையும் பாரிசான் எதிர்கொள்ளாது என டத்தோக் ஷைபூல் ஹசிசி சைனூல் தெரிவித்தார்.
கெடா மாநில ம.இ.கா முடிவெடுத்த பின்னர் அம்னோ அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் சமரசம் செய்யவும், ம.இ.காவின் ஆதரவிற்காகக் கெஞ்சாது! போனால் போகட்டும் என்கிற மனநிலையில் கெடா அம்னோ இருப்பதாக வெளிப்படையாக டத்தோக் ஷைபூல் ஹசிசி சைனூல் தெரிவித்தார். இனி எந்தவொரு சமரசத்திற்கும் கெடா மாநில அம்னோ தயாராக இல்லை என டத்தோக் ஷைபூல் ஹசிசி சைனூல் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
விசுவாசம் என்பது தேர்தல் காலத்தில் மட்டும் இருக்க கூடாது. தேர்தலுக்குப் பின்னர் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டு, எதிரிகளுடன் கூட்டணி அமைக்க விரும்புவர்களிடம் என்ன மாதிரியான நம்பிக்கையில் சமரசம் செய்வது? தேர்தல் ஆதாயத்திற்காக எதிரிகளிடம் அம்னோ கூட்டணியை வைத்ததில்லை. பாஸ் கட்சியுடன் அம்னோ மேற்கொண்ட உடன்படிக்கை என்பது இஸ்லாமியர்களின் நலன் காக்கும் உடன்படிக்கை மட்டுமே, அது அரசியல் உடன்படிக்கை இல்லை என்கிற புரிதல் இல்லாத ம.இ.காவிடம் மேலும் விளக்கமளித்தாலும் எந்தவொரு பயனுமில்லை என டத்தோக் ஷைபூல் ஹசிசி சைனூல் தெரிவித்தார்.
தேர்தல் கூட்டணிக்கும் இன மத சமூக உடன்படிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது என்பதை டத்தோக் ஷைபூல் ஹசிசி சைனூல் சுட்டிக்காட்டினார். கெடா மாநில ம.இ.கா கெடா பாரிசானிலிருந்து வெளியேற முடிவெடுத்தால் தாராளமாக வெளியேறலாம். பாரிசானிலிருந்து வெளியேறும் கதவு திறந்தே இருக்கிறது. ஆனால் பாரிசானில் நுழையும் கதவு மூடியிருப்பதையும் வெளியேறுபவர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என டத்தோக் ஷைபூல் ஹசிசி சைனூல் நினைவூட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



